புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வானிலை இயக்கத்தின் அமலாக்கம்

प्रविष्टि तिथि: 23 JUL 2026 1:28PM by PIB Chennai

'வானிலை மாற்றங்களுக்குத் தயாரானபருவநிலை சார்ந்த அறிவார்ந்த நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கத்துடன்வானிலை இயக்கத் திட்டத்தை 2025, ஜனவரி 14 அன்று பிரதமர் தொடங்கிவைத்தார். புவி மண்டலக் கண்காணிப்புகளின் பல்வேறு கூறுகளை வலுப்படுத்துவதும்அனைவருக்கும் தடையற்ற வானிலை மற்றும் பருவநிலை சேவைகளை வழங்குவதற்காக முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை வழங்கும் புவி மண்டல அணுகுமுறையைச் செயல்படுத்துவதும் வானிலை இயக்கத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம்நாட்டின் வானிலை மற்றும் பருவநிலை கண்காணிப்புகள்மாதிரியாக்கம்முன்கணிப்பு ஆகியவற்றை பன்மடங்கு மேம்படுத்திஅதன் மூலம் சிறந்தமிகவும் பயனுள்ளதுல்லியமானசரியான நேரத்தில் வழங்கப்படும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் துறைஇஸ்ரோவால் இயக்கப்படும் 50 டாப்ளர் வானிலை ரேடார்களின் தரவுகளைப் பெறுகிறது. நாடு முழுவதும் 29 சி-பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவுவதன் மூலம் இந்தக் கண்காணிப்பு நடைமுறைகள் படிப்படியாக வலுப்படுத்தப்படுகிறது. மேலும்வானிலை கண்காணிப்பு ஆய்வுகள்கணிதமுறை வானிலை முன்னறிவிப்புவளிமண்டல இயக்கவியல் ஆய்வு ஆகியவற்றை மேம்படுத்தபல அமைப்புகளை  நிறுவுவதற்கான திட்டங்களும் உள்ளன. இந்த முயற்சிகள் நாட்டின் கண்காணிப்புத் திறன்களை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288238&reg=3&lang=1

 

***

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2288678) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी