சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் 775 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன – நாடாளுமன்றத்தில் தகவல்!
प्रविष्टि तिथि:
23 JUL 2026 6:42PM by PIB Chennai
பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குளை விரைந்து விசாரிக்க நாடு முழுவதும் 775 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதாக மத்தியச் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதில் 398 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்களும் அடங்கும்.
தமிழ்நாட்டில் 20 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட மொத்தம் 20 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் இத்திட்டம் 2026 செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக இதுவரை மத்திய அரசு ரூ.1259.51 கோடி நிதி விடுவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் 1.43 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி, 66,500 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
நீதிபதிகள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது மற்றும் நீதிமன்றக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது மாநில அரசுகள் மற்றும் அந்தந்த உயர் நீதிமன்றங்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288472®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2288472
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2288668)
आगंतुक पटल : 10