சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மலைவாசத் சுற்றுலாத் தலங்களில் திடக்கழிவு மேலாண்மை: மத்திய அரசு நடவடிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUL 2026 4:21PM by PIB Chennai
மலைப் பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் திடக்கழிவுகளை முறைப்படி நிர்வகிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ள முக்கிய விவரங்கள்:
'திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026'-ன் படி, கழிவுகள் 4 பிரிவுகளாகப் (ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புப் பராமரிப்புக் கழிவு) பிரிக்கப்பட வேண்டும். மலைப் பகுதிகள் மற்றும் தீவுகளுக்கு இதில் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் வடகிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்களுக்கு 90:10 என்ற வீதத்தில் மத்திய அரசு அதிக நிதி உதவி வழங்குகிறது (உதாரணமாக: ஜம்மு காஷ்மீருக்கு நகர்ப்புறக் கழிவு மேலாண்மைக்கு ₹131.70 கோடியும், கிராமப்புறத்திற்கு ₹245 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது). கழிவு சேகரிப்பு முதல் சுத்திகரிப்பு வரை அனைத்து நிலைகளும் மத்திய போர்டல் மூலம் கண்காணிக்கப்படும்.
கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைவாசத் தலங்கள் பயன்பெறும் வகையில், இதேபோன்று விரிவான திடக்கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்கள் மாநில உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீவிரமாகச் செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகவலைச் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு. கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288317®=3&lang=1
****
TV/NB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2288548)
வருகையாளர் எண்ணிக்கை : 43