பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் கோர் போலி மொழியை இணைப்பது குறித்து மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே விளக்கம்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 4:07PM by PIB Chennai

அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் கோர் போலி உட்பட பல்வேறு மொழிகளை இணைக்கக் கோரி தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இதனைத் தெரிவித்த அவர், அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் ஒரு மொழியைச் சேர்ப்பதற்கு நிலையான அளவுகோல்கள் எதுவும் வரையறுக்கப்படவில்லை என்று கூறினார். பஹ்வா, சீதாகாந்த் மொஹாபத்ரா குழுக்கள் மூலம் இதற்கான அளவுகோல்களை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறைவடையவில்லை என்று கூறினார். சமூக, கலாச்சார, பொருளாதார காரணிகளால் மொழிகளின் வளர்ச்சி மாறுபடுவதால் நிலையான வரம்புகளை நிர்ணயிப்பது கடினம் எனக் குறிப்பிட்ட அவர், மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

பழங்குடியின மொழிகளைப் பாதுகாக்கச் சாகித்ய அகாதமி மொழி மேம்பாட்டு வாரியத்தை அமைத்து மாநாடுகளை நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர், அங்கீகரிக்கப்படாத மொழிகளின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் அறிஞர்களுக்கு பாஷா சம்மான் விருது வழங்கி கெளரவிப்பதாகவும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287692&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2288052) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu