திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாடுகளில் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 4:07PM by PIB Chennai

உலகில் 25 நாடுகளில் பல்வேறு துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தரவை வெளியுறவு அமைச்சகம் பகிர்ந்துள்ளது. சர்வதேச வாய்ப்புகளுக்கான இந்திய தொழிலாளர்களுக்குத் தேவையான திறன்களை அளிப்பதற்கு மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அது செயல்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒருங்கிணைந்த பயிற்சி திட்டங்களுக்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், கத்தார், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 8 நாடுகளுடன் மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.  தற்காலிக தொழிலாளர் தேர்வு ஒப்பந்தங்களின் கீழ் இஸ்ரேல், மொரீசியஸ் நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாடுகளுடன் ஒருங்கிணைந்து பயிற்சி திட்டங்களை நடத்தி வருகிறது.  சுகாதார பராமரிப்பு, விருந்தோம்பல் மற்றும் இதர துறைகளில் திறன் மேம்பாட்டிற்காக தொழில்நுட்ப உள்ளகப் பயிற்சி போன்ற திட்டங்களை ஜப்பானுடன் இணைந்து நடத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287695&reg=3&lang=1

****

TV/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2288049) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी