அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அரசு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வணிகமயமாக்குதல்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
प्रविष्टि तिथि:
22 JUL 2026 4:19PM by PIB Chennai
அரசு ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கவும், தொழில் துறைக்கு மாற்றவும் தேசிய அளவிலான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதன்மை அமைப்பான தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் 5,100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்குத் தொழில்நுட்ப உரிமங்களை வழங்கி, 2,100க்கும் அதிகமான அறிவுசார் சொத்துரிமைப் பதிவுகளுக்கு உதவியுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஆற்றல், சுகாதாரம், வேளாண் தொழில் நுட்பப் பிரிவுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வணிகமயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தொழில்நுட்ப உரிமங்கள் மூலம் சிஎஸ்ஐஆர் அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் 148 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க உதவியுள்ளது. இதன் மூலம் ரூ.142.67 லட்சம் ராயல்டி வருவாய் ஈட்டப்பட்டதுடன், ரூ.246.60 லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, சுமார் 7,200 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது தவிர, உயிரி-தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவிக் குழுமம் 25 மாநிலங்களில் 94 இன்குபேஷன் மையங்களை நிறுவித் தொழில்நுட்ப மாற்றத்தை ஊக்குவித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287709®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2288034)
आगंतुक पटल : 6