கனரகத் தொழில்கள் அமைச்சகம்
இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு 8.26 சதவீதமாக உயர்வு!
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2026 5:05PM by PIB Chennai
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், சார்ஜிங் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2019 முதல் 2024 வரை ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்ட ஃபேம்-II திட்டத்தின் கீழ் சுமார் 16.72 லட்சம் மின்சார வாகனங்கள் மற்றும் 5,197 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும், பொது சார்ஜிங் நிலையங்களை அமைக்க இத்திட்டத்தின் கீழ் ரூ.912.50 கோடி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ரூ.10,900 கோடி நிதியில் தொடங்கப்பட்ட பிரதமரின் மின்சார வாகன முன்முயற்சி திட்டத்தின் மூலம் இதுவரை 26.59 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இத்திட்டத்தின்கீழ் 14,028 மின்சாரப் பேருந்துகள் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 38,000-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகளுக்குப் பாதுகாப்பு நிதி அளிக்கும் பிரதமரின் இ பஸ் சேவா திட்டமும், மின்சாரக் கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் பிஎல்ஐ திட்டங்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது, பச்சை நிற நம்பர் பிளேட் மற்றும் சாலை வரி விலக்கு போன்ற அரசின் தொடர் நடவடிக்கைகளால் நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது.
இத்தகவல்களை மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287131®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2287131
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2287508)
வருகையாளர் எண்ணிக்கை : 39