மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடலோர மீனவ கிராமம்

प्रविष्टि तिथि: 21 JUL 2026 3:06PM by PIB Chennai

2020-21 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் மீன் வளத் திட்டம், நிலையான நடைமுறைகள் மூலம் கடலோர மீனவர்களின் பொருளாதார மற்றும் சமூக நலன்களை மேம்படுத்த, ஒரு அலகுக்கு ரூ. 750 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த நவீன கடலோர கிராமங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப நவீன உள்கட்டமைப்பு, பேரிடரைத் தாங்கக்கூடிய வீடுகள், புயல் மற்றும் சுனாமி பாதுகாப்பு மையங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய வசதிகளை வழங்குவதன் மூலம், இத்திட்டம் மீன்வள மதிப்புச் சங்கிலியில் வாழ்வாதாரங்களையும் பங்கேற்பையும் வலுப்படுத்துகிறது. இது கடலோர மாநில அரசுகளுடன் இணைந்து 60:40 என்ற செலவுப் பகிர்வு அடிப்படையில் செயல்படுத்தப்படும்,

கடலோர சமூகங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, மற்றொரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள 100 மீனவ கிராமங்களை, பொருளாதார ரீதியாகச் செழிப்பான 'பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய கடலோர மீனவ கிராமங்களாக மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கான செலவு ஒரு மீனவ கிராமத்திற்கு ரூ. 200 லட்சம் ஆகும், மேலும் முழுச் செலவையும் (100%) இந்திய அரசே ஏற்கிறது.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286997&reg=3&lang=1

****

TV/PKV/SH


(रिलीज़ आईडी: 2287504) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी