வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு நகர்ப்புறங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 7:27PM by PIB Chennai

நீர் மற்றும் சுகாதாரம் ஆகியவை மாநிலப் பட்டியலுக்கு உட்பட்டவை. வடிகால்களைச் சுத்தம் செய்தல் மற்றும் தூர்வாருதல் உள்ளிட்ட நகர்ப்புற வெள்ள மேலாண்மைப் பணிகள், மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அல்லது நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்களின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. இவையே வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் அமைப்புகளைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன. மத்திய அரசு, பல்வேறு திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்குத் ஆதரவளிக்கிறது. நகர்ப்புறத் திட்டமிடல் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களுக்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் அது வழங்குகிறது.

2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அம்ருத் திட்டத்தின் கீழ், வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்கவும், முற்றிலுமாகத் தவிர்க்கவும் வடிகால்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் ரூ. 3022.39 கோடி மதிப்பிலான 838 மழைநீர் வடிகால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.21 லட்சம் ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய, ரூ. 6,003.34 கோடி மதிப்பிலான 2,951 நீர்நிலைப் புத்துயிரூட்டல் திட்டங்கள், சுமார் 12,750 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய, ரூ. 1,087.12 கோடி மதிப்பிலான 1,649 பசுமைப் பகுதிகள் மற்றும் பூங்கா அமைக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகன் சாஹு இன்று மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286775&reg=3&lang=1

****

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2286869) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी