கலாசாரத்துறை அமைச்சகம்
கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குரு-சிஷ்யன் பாரம்பரிய மேம்பாட்டு நிதியுதவியாக கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.191 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
20 JUL 2026 4:20PM by PIB Chennai
நாடு முழுவதும் நாட்டுப்புற, பழங்குடியின கலைகள், பாரம்பரிய இசை, நடனம், கலாச்சார திருவிழாக்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில் மத்திய கலாச்சார அமைச்சகம் கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள கலை அமைப்புகள், கலைஞர்களுக்கு வருடாந்திர நிதி உதவி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் கலை அம்சங்களை வளர்க்கும் நோக்கில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் உட்பட பாட்டியாலா, உதய்பூர், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஏழு மண்டல கலாச்சார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடர்பாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷேகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், குரு-சிஷ்யன் பாரம்பரிய மேம்பாட்டு நிதியுதவியின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த நிதியாண்டில் 24 அமைப்புகளுக்கு 191.72 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கலாச்சார விழாக்கள், கலாச்சாரத் திருவிழாக்கள் மற்றும் தயாரிப்புக்கான மானியத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 2025-26 நிதியாண்டில் 15 அமைப்புகளுக்கு 52.27 லட்சம் ரூபாயும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286592®=3&lang=1
***
TV/PD/RJ
(रिलीज़ आईडी: 2286831)
आगंतुक पटल : 25