கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமிய கலைஞர்கள், கைவினைஞர்கள், இதர கலாச்சார துறையைச் சார்ந்தவர்களின் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுகிறது

प्रविष्टि तिथि: 20 JUL 2026 4:13PM by PIB Chennai

நாடு முழுவதும் தேசிய கலாச்சார வரைபடமாக்கல் இயக்கம் என் கிராமம் என் பாரம்பரியம் என்ற முன்முயற்சியின் மூலம், கிராம அளவிலான கலாச்சார வரைபடமாக்கல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  கலைஞர்கள், கைவினைஞர்கள், இதர கலாச்சார துறையைச் சார்ந்தவர்கள் குறித்த தகவல்கள் கிராமங்களின் கலாச்சார தகவல்கள் குறிப்புகளின் ஒரு பகுதியாக ஆவணப்படுத்தப்படுகிறது.  எனினும், கலைஞர்கள் அல்லது கலாச்சார துறையை சேர்ந்தவர்களை பதிவு செய்வதற்கான நடைமுறை ஏதும் கிடையாது. என் கிராமம் என் பாரம்பரியம் இணையதளத்தில் கிராம வாரியாக தகவல்கள் பராமரிக்கப்படுகின்றன.  பிரிவுகள் வாரியாக தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை.  அதன்படி, பதிவு செய்யப்பட்ட கலைஞர்கள், கைவினைஞர்கள், கலாச்சார துறையைச் சார்ந்தவர்கள் குறித்த மாநில வாரியான தகவல்கள் பராமரிக்கப்படுவதில்லை. 

என் கிராமம் என் பாரம்பரியம் இயக்கத்தின்கீழ் ஆவணப்படுத்தப்படும் பணிகள் கிராம அளவில் மேற்கொள்ளப்பட்டு கிராமங்களின் தகவல் குறிப்புகளில் கலாச்சார தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன.  இத்திட்டத்தின்கீழ் கலாச்சார குழுமங்கள் குறித்த தனித்தரவுகள் பராமரிக்கப்படுவதில்லை. 

இத்தகவலை, மத்திய கலாச்சாரம், சுற்றுலாத் துறை அமைச்சர்
திரு கஜேந்திர சிங் ஷெகாவாத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286580&reg=3&lang=1

***

SS/IR/SU/RJ


(रिलीज़ आईडी: 2286823) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी