புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
மத்திய அரசு துறைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயலாக்கம் குறித்துக் கண்காணிக்கப்படுகிறது
प्रविष्टि तिथि:
20 JUL 2026 3:20PM by PIB Chennai
மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் ரூ.150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பிலான மத்திய அரசு துறைகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிலைக் குறித்து, நாட்டின் கட்டமைப்பிற்கான உள்கட்டமைப்புத் திட்ட மதிப்பீட்டு கண்காணிப்பு, பகுப்பாய்வு முறை (பைமனா) மூலம் இணையதளம் வாயிலாக கண்காணித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள், துறைகள், அமலாக்க முகமைகள் ஆகியவை பைமனா இணையதளத்தில் திட்டங்கள் குறித்த அவ்வப்போதைய தகவல்களை பதிவேற்றம் செய்கின்றன.
அதனடிப்படையில் அனைத்து உள்கட்டமைப்புக் குறித்த விவரங்கள் https://paimana-proj.mospi.gov.in/ReportPage என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் புதிய அறிக்கையில் கிடைக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் கால அளவு, செலவு அதிகரிப்பதற்கான காரணங்கள் ஆகியவை ஒவ்வொரு திட்டத்திற்கும் மாறுபடுகின்றன. பல்வேறு தொழில்நுட்பம், நிதி, நிர்வாக காரணிகள் ஆகியவற்றை இது சார்ந்ததாகும். எனினும் திட்டங்களை அமல்படுத்தும் முகமைகள், திட்டங்களின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளன. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவரங்கள், வனம் / வனவிலங்கு / சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு விவகாரங்கள், பயன்பாட்டு வசதிகளை இடமாற்றம் செய்தல் கட்டுமானம் மற்றும் இதர பணிகளில் தாமதம் ஆகியவை காரணங்களாகும்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286550®=3&lang=1
***
SS/IR/PS/RJ
(रिलीज़ आईडी: 2286770)
आगंतुक पटल : 10