சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பாக பாக்கேஜ் குடிநீர் தொடர்பான பயிற்சி

प्रविष्टि तिथि: 17 JUL 2026 8:05PM by PIB Chennai

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), தொழில்துறைகளிடையே தர விழிப்புணர்வு, தயாரிப்பு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

  

அதன் ஒரு பகுதியாக, பிஐஎஸ் சென்னை அலுவலகம், பேக்கேஜ் குடிநீர் குறித்த இரண்டு நாள் பயிற்சியை 2026 ஜூலை 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை தரமணியில் உள்ள அலுவலகத்தில் நடத்தியது. இந்தப் பயிற்சியில் பேக்கேஜ் குடிநீர் உற்பத்தி தொழில்துறைகளைச் சேர்ந்த தரக் கட்டுப்பாட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் நோக்கங்கள் குறித்து பிஐஎஸ் சென்னை அலுவலகத்தின் மூத்த இயக்குனரும், தலைவருமான திரு எஸ்.டி. தயானந்த் விளக்கமளித்தார்.  போக்குவரத்து மற்றும் சேமிப்பின்போது பேக்கேஜ் குடிநீர் பாட்டில்கள் பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு உட்படக்கூடும் என்றும், இருப்பினும் அவ்வாறான சூழ்நிலைகள் தயாரிப்பின் தரத்தையும் பாதுகாப்பையும் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப அமர்வுகளை பிஐஎஸ் சென்னை அலுவலகத்தின் துணை இயக்குனர் திரு அஜய் சந்தேல் நடத்தினார். இந்த அமர்வுகளில், ஐஎஸ் 14543 தரநிலையின் விதிமுறைகள், தயாரிப்பு கையேடு, ஆய்வு மற்றும் சோதனைத் திட்டம், பிஐஎஸ் தயாரிப்பு சான்றளிப்பு திட்டத்தின் கீழ் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் பதிவுகள் பராமரிப்பு தேவைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

   

பயிற்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் சென்னை தரமணியில் உள்ள பிஐஎஸ் தென் மண்டல ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, ஐஎஸ் 14543-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய மற்றும் அத்தியாவசிய அளவுருக்களுக்கான சோதனைகள் குறித்து தென் மண்டல ஆய்வக குழுவினர் செயல்முறை விளக்கங்களை வழங்கினர்.

பயிற்சியின் நிறைவு அமர்வில் பிஐஎஸ் சென்னை அலுவலகத்தின் இயக்குனர் திரு முனிநாராயணா பங்கேற்று, பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

****

AD/BR/PD


(रिलीज़ आईडी: 2286211) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English