சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கல்பாக்கத்தில் அவசரகால ஒத்திகை

प्रविष्टि तिथि: 18 JUL 2026 12:34PM by PIB Chennai

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தை சுற்றிய பகுதிகளில் நடைபெற்ற அவசரகால ஒத்திகை நேற்று (17.07.2026) மேற்கொள்ளப்பட்டது.

அணுசக்தித் துறையின் கல்பாக்கம் மையத்தில் பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இந்திய அணுமின் கழகத்தின் கீழ் உள்ள சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், 'பாவினி' நிறுவனத்தால் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் உலை (PFBR), பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் விதிமுறைகளின்படி, அவசரக்காலத் தயார்நிலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு, எதிர்வினை முறையில், கல்பாக்கம் அணுசக்தித் துறை மையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வளாகத்திற்கு வெளியிலான அவசரக்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. உலையை மின் உற்பத்தி செயல்பாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு முந்தைய ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்க, கல்பாக்கம் வளாகத்தைச் சுற்றியுள்ள அவசரக்காலத் திட்டமிடல் மண்டலத்தில் இந்த ஒத்திகை நேற்று (ஜூலை 17, 2026) நடத்தப்பட்டது.

நிகழ்வுக்கான கட்டளை அதிகாரியாக செயல்பட்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம் வீரப்பனின் தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையால் பொதுவெளியில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. அணுமின் நிலையத்தின் நிலைய இயக்குநரும் வளாக அவசரக்கால இயக்குநருமான திரு எஸ்.பி. செல்வகுமரன் பிஎஃப்பிஆர் நிலைய இயக்குநர் திரு அல்லு ஆனந்த் ஆகியோர் தலைமையிலான கல்பாக்கம் அவசரக்காலக் குழு இந்த ஒத்திகைக்கான தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கியது. அணுமின் நிலையத்தின் வடிவமைப்பு, சிறந்த பாதுகாப்பு ஆகியவை காரணமாக, இத்தகைய அவசரநிலை நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆனாலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதில் தயார்நிலையைச் சோதிப்பதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.

மாவட்டத்திலுள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் இன்றி இந்த அவசரகால ஒத்திகை நடத்தப்பட்டது.

அணுசக்தி, பேரிடர் மீட்பு ஆகியவை தொடர்புடைய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 15 மூத்த அதிகாரிகள் இச்சோதனை முயற்சியை நேரில் பார்வையிட்டனர்.

****

TV/PLM/PD


(रिलीज़ आईडी: 2286032) आगंतुक पटल : 40
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English