அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

செயற்கை கோள்களை பாதிக்கும் சூரியனின் காந்த புலங்கள் குறித்த ஆராய்ச்சியில் முன்னேற்றம்

प्रविष्टि तिथि: 17 JUL 2026 3:09PM by PIB Chennai

சூரியனின் மேற்பரப்புக்கும் அதன் மேல் அடுக்குகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இது, செயற்கைக்கோள்கள், தகவல் தொடர்பு அமைப்புகள், நேவிகேஷன் கட்டமைப்புகள், பூமியில் உள்ள மின் கட்டமைப்பு போன்றவற்றைப் பாதிக்கக் கூடிய விண்வெளி வானிலையைப் புரிந்துகொள்வதில் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

பல ஆண்டுகளாக, சூரியனின் மத்திய ரேகையிலிருந்து துருவங்களை நோக்கி மெதுவாக ஆனால் சீராக நகரும் சூடான வாயு, அல்லது பிளாஸ்மாவின் ஓட்டம் இருப்பதை விஞ்ஞானிகள் அறிந்திருக்கிறார்கள். மெரிடியனல் ஓட்டம் என்று அழைக்கப்படும் இந்த இயக்கம் , ஒரு மாபெரும் கடத்தும் பட்டை போலச் செயல்பட்டு, சூரியனின் காந்தப்புலங்களை அதன் மேற்பரப்பு முழுவதும் கொண்டு செல்ல உதவுகிறது. இது சூரியனின் 11 ஆண்டு சூரிய சுழற்சியைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.  இதுவரை, இந்த ஓட்டம் சூரியனின் கீழ் வளிமண்டல அடுக்குகளில் மட்டுமே காணப்பட்டது.

 

அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமான ஆரியபட்டா வானியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து நடத்திய ஒரு புதிய ஆய்வு, பிளாஸ்மாவின் மெதுவான இயக்கம் முன்பு அறியப்பட்டதை விட சூரியனின் வளிமண்டலத்தில் மிக உயரமான பகுதிகளிலும் தொடர்கிறது என்பதைக் காட்டியுள்ளது.

 

 இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த உயரங்களில், சூரியனின் காந்தப்புலம் பிளாஸ்மாவின் இயக்கத்தை வலுவாகப் பாதிக்கிறது. எனவே, இந்தக் கண்டுபிடிப்புகள் சூரிய வளிமண்டலம் முழுவதும் காந்தப்புலங்களும் பிளாஸ்மாவும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொள்கின்றன என்பது குறித்த புதிய பார்வைகளை வழங்குகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285705&reg=3&lang=1

(Release ID : 2285705)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2285954) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी