சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
காஞ்சிபுரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆதார் சேவை மையம் தொடக்கம்
प्रविष्टि तिथि:
17 JUL 2026 7:28PM by PIB Chennai
காஞ்சிபுரம் நகரில் வசிப்பவர்களை மையமாகக் கொண்டு ஆதார் சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் காஞ்சிபுரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய 'ஆதார் சேவை மையத்தை' இன்று (17 ஜூலை 2026) செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. காஞ்சிபுரம் ஆதார் சேவை மையத்தை, தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்பிகே.தென்னரசு, வனத்துறை அமைச்சர் திரு ஆர்.வி. ரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி ஸ்னேகா, தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலக இயக்குநர், பிற அதிகாரிகள், ஆதார் சேவை மையப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர்கள் தனித்துவ அடையாள ஆணையத்தின் இந்த முயற்சியைப் பாராட்டினர். மேலும், மையத்திற்கு வருகை தந்த பொதுமக்களுடனும் பணியாளர்களுடனும் கலந்துரையாடினர். ஆதார் பதிவு, விவரங்களைப் புதுப்பிக்கும் நடைமுறைகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, மையத்தில் வழங்கப்படும் பல்வேறு ஆதார் சேவைகளையும் ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் ஆதார் சேவை மையமானது, ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தடையற்ற ஆதார் சேவைகளை வழங்கும் வகையில் 8 செயல்பாட்டுக் கருவிகளைக் கொண்டுள்ளது. பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இம்மையம் செயல்படுவதால், மக்களுக்குச் சிறந்த வசதியும் சௌகரியமும் உறுதி செய்யப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தனித்துவ அடையாள ஆணையத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள ஆதார் சேவை மையங்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 21 ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன; இதன் மூலம் மாநிலத்தில் ஆதார் சேவை மையங்களின் மொத்த எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கும்.
தனித்துவ அடையாள ஆணையத்தின் முன்பதிவு இணையதளமான https://bookappointment.uidai.gov.in/ மூலம், ஆதார் சேவை மையங்களில் சேவைகளைப் பெறுவதற்கான நேரத்தை (அப்பாயிண்ட்மெண்ட்) ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2285934)
आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English