சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பிஎஸ்என்எல் சென்னை வட்ட தலைமைப் பொது மேலாளராக திரு. பி. சுதாகர ராவ் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 17 JUL 2026 6:57PM by PIB Chennai

திரு. பி. சுதாகர ராவ், இன்று (2026 ஜூலை 17) பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி வட்ட தலைமைப் பொது மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் 1992-ம் ஆண்டு இந்தியத் தொலைத்தொடர்புப் பணி (Indian Telecom Service) தொகுதியைச் சேர்ந்தவர். சென்னை தொலைபேசி வட்ட தலைமைப் பொது மேலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன், பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டத்தின் விற்பனை, சந்தைப்படுத்தல் பிரிவின் முதன்மைப் பொது மேலாளராகப் பணியாற்றினார். தொலைத்தொடர்புத் துறையில் பல்வேறு பிரிவுகளில் இவருக்கு ஆழ்ந்த அனுபவம் உள்ளது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப ஸ்விட்சுகள் (switches), தொலைத்தொடர்பு நெட்வொர்க் நிர்வாகம், திட்டமிடல், மொபைல் கோர் நெட்வொர்க் இயக்கமும் பராமரிப்பும், மொபைல் நெட்வொர்க் திட்டமிடல், பிஎஸ்என்எல்-ன் விற்பனை, சந்தைப்படுத்தல் பிரிவுகள் ஆகியவற்றில் இவர் அனுபவம் பெற்றுள்ளார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச வட்டம், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஷில்லாங், தெலுங்கானா வட்டம், தமிழ்நாடு வட்டம் ஆகியவற்றில் இவர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2285893) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English