சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சான்சிபார் அதிபர் டாக்டர் உசேன் அலி மவின்யி, சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்

प्रविष्टि तिथि: 17 JUL 2026 6:52PM by PIB Chennai

 

சான்சிபார் அதிபரும் புரட்சிகர கவுன்சிலின் தலைவருமான டாக்டர் உசேன் அலி மவின்யி, இன்று (17 ஜூலை 2026) நடைபெற்ற சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார்.

இந்தியாவின் முதலாவது சர்வதேச ஐஐடி வளாகமாக சென்னை  ஐஐடி சான்சிபார் வளாகம் செயல்பட்டு வருகிறது. இவ்வளாகம், ஆப்பிரிக்காவிற்கும் உலகம் முழுவதற்கும் கல்விசார் சிறப்பையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் மேம்படுத்தும் வகையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், இணைப்பட்டங்கள், இரட்டைப்பட்டங்கள் உட்பட மொத்தம் 3,106 மாணவர்களுக்கு 3,518 பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் இணை முனைவர் பட்டங்கள், இரட்டை முனைவர் பட்டங்கள் உட்பட 511 முனைவர் பட்டங்களும் வழங்கப்பட்டன.

பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வென்றவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்த சான்சிபார் அதிபர் டாக்டர் உசேன் அலி மவின்யி, “ஒவ்வொரு தலைமுறையும், உலகை அது இருக்கும் நிலையிலேயே மரபாகப் பெறுகிறது. ஆனால் உங்களுக்கோ, இந்த உலகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி அதனை வடிவமைப்பதற்கான அசாதாரண தொழில்நுட்ப வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். வரலாற்றின் தீர்க்கமான தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுகிறீர்கள்செயற்கை நுண்ணறிவுரோபாட்டிக்ஸ்உயிரித் தொழில்நுட்பம், குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவை மனிதகுலம் வாழும்கற்கும்வேலை செய்யும் முறையையே மாற்றியமைத்து வருகின்றனஇருப்பினும்தொழில்நுட்பம் மட்டுமே எப்போதும் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளித்ததில்லை என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறதுஒவ்வொரு சிறந்த கண்டுபிடிப்பும் மனிதகுலத்தின் முன் ஒரு வாய்ப்பை வழங்குகிறதுஅது சமத்துவமின்மையை ஆழப்படுத்தலாம்வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம்சமூகங்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம்அந்த வாய்ப்பு தொழில்நுட்பத்திடம் இல்லைமாறாக அதனை உருவாக்குபவர்களிடம் தான் உள்ளது” என்று அவர் கூறினார்.

நாடுகள் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாகக் கூட்டாண்மையையும், போட்டிக்கு பதிலாக ஒத்துழைப்பையும், குறுகிய நலன்களுக்குப் பதிலாகப் பகிர்ந்துகொள்ளும் லட்சியத்தையும் தேர்ந்தெடுக்கும்போது என்னவெல்லாம் சாத்தியமாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை ஐஐடி செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.

டாக்டர் உசேன் அலி மவின்யி மேலும் கூறுகையில், “உலகெங்கிலும், ஐஐடி மெட்ராஸ் என்பது கல்விச் சிறப்பிற்கு உதாரணமாக ஒன்றாக மாறியுள்ளது. இருப்பினும், என்னை மிகவும் கவர்ந்தது பொறியியல் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் அதன் வியக்கத்தக்க நன்மதிப்பு மட்டுமல்ல, அதன் கண்டுபிடிப்பு கலாச்சாரமும் தான். வகுப்பறைகள், ஆய்வகங்களைத் தாண்டி, கருத்தாக்கங்களை மக்களுக்கு கொண்டு செல்ல ஊக்குவிக்கும் ஒரு கல்வி நிறுவனமா திகழ்கிறது. இதன் மூலம் நிறுவனங்களை உருவாக்குகிறது, வேலைவாய்ப்பை உருவாக்குகிறது, அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது. இத்தகைய தத்துவம் நமது லட்சியங்களோடு ஒத்துப்போகிறது” என்றார்.

 

தொடர்ந்து பேசிய டாக்டர் உசேன் அலி மவின்யி கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ்-ன் முதலாவது சர்வதேச வளாகமாக ஐஐடி மெட்ராஸ் சான்சிபார் நிறுவப்பட்டிருப்பது, கல்விசார்ந்த சாதனைகளை விட மிக மேலானது. அறிவு எல்லைகளைக் கடந்தது என்பதையும், திறமை என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் முடக்கப்படக் கூடாது என்பதையும் பிரதிபலிக்கிறது. நாடுகள் தனிமைப்படுத்தலுக்குப் பதிலாகக் கூட்டாண்மையையும், போட்டிக்கு பதிலாக ஒத்துழைப்பையும், குறுகிய நலன்களுக்குப் பதிலாகப் பகிர்ந்துகொள்ளும் லட்சியத்தையும் தேர்ந்தெடுக்கும்போது என்னவெல்லாம் சாத்தியமாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை ஐஐடி செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்திப் பேசிய ஐஐடி மெட்ராஸ் நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் பவன் கோயங்கா கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ் தனது முதல் சர்வதேச வளாகத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் சான்சிபாரில் தொடங்கியது. இன்று, அந்நாட்டின் குடியரசுத் தலைவரே சென்னையில் பட்டம்பெறும் எங்கள் மாணவர்களின் முன்னிலையில் வீற்றிருக்கிறார். இது வெறும் புவியியல் ரீதியான தற்செயலான நிகழ்வு அல்ல. கல்வி, கண்டுபிடிப்பு, மனிதவளம் ஆகியவைதான் நிலையான வளர்ச்சிக்கான உண்மையான அடித்தளங்கள் என்ற பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் உருவான இருநாட்டு மக்களுக்கு இடையேயான வலுவான கூட்டாண்மையின் அடையாளமாகும்” என்றார்.

இயக்குநரின் அறிக்கையை சமர்ப்பித்துப் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “2027-ம் ஆண்டுக்குள் மாணவர் சேர்க்கையை 350 முதல் 500 ஆக உயர்த்த ஐஐடி மெட்ராஸ் சான்சிபார் வளாகம் திட்டமிட்டுள்ளது. இதையொட்டி ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்துதல், தொழில்துறையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், ஆராய்ச்சி உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கிழக்கு ஆப்பிரிக்காவின் முதல் ஆராய்ச்சி ஒருங்கிணைந்த புத்தொழில் மையத்தை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சான்சிபாரின் கல்வி, தொழிற்பயிற்சித்துறை அமைச்சர் லேலா முகமது மூசா, இந்தியாவிற்கான தான்சானியக் குடியரசின் தூதர் திருமதி அனிசா கபுஃபி எம்பேகா, சென்னை ஐஐடி நிர்வாகக் குழுத்தலைவர் டாக்டர் பவன் கோயங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

***

AD/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2285887) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English