அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சி-ஃபைக்கோசயனின் எனப்படும் இயற்கை நிறமிகள் உற்பத்திக்காக, ஹைதராபாத் தனியார் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நிதியுதவி
प्रविष्टि तिथि:
16 JUL 2026 2:59PM by PIB Chennai
உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த நிலையான உற்பத்தியில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், "ஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி இனத்தைப் பயன்படுத்தி சி-ஃபைக்கோசயனின் உற்பத்தி” என்ற தலைப்பிலான திட்டத்திற்காக, ஹைதராபாத்தைச் சேர்ந்த மெஸ்ஸர்ஸ் கே.என். பயோசயின்சஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
உணவு, ஊட்டச்சத்து மருந்துகள், விவசாயம், மீன் வளர்ப்பு, கோழித் தீவனம், உயிரிஊக்கிகள் போன்ற துறைகளில் பயன்பாடுகளைக் கொண்ட, உயர்மதிப்புள்ள சி-ஃபைக்கோசயனின் என்ற இயற்கை நீல நிறமியை உற்பத்தி செய்வதற்கான ஒரு உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதையும், அதே நேரத்தில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை நிறமிகள் மீதான இந்தியாவின் சார்புநிலையைக் குறைப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பமானது, குவஹாத்தி இந்திய தொழில்நுட்பக் நிறுவனத்தால் (ஐஐடி) உள்நாட்டு ஸ்பைருலினா வகையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, வணிக உற்பத்திக்காக ஒரு முறையான தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் அந்த நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, பொது நிதியுதவி பெற்ற ஆராய்ச்சியை சந்தைக்கு ஏற்ற உயிரித் தொழில்நுட்பப் பொருட்களாக வெற்றிகரமாக மாற்றுவதைப் பிரதிபலிப்பதோடு, உயிரிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், நிலையான உற்பத்தி ஆகிய மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285332®=3&lang=1
***
(Release ID: 2285332)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2285468)
आगंतुक पटल : 6