PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

प्रविष्टि तिथि: 15 JUL 2026 4:35PM by PIB Chennai

இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரக் கூட்டாண்மையில் மிக முக்கிய மைல்கல்லாக 'இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம்இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதுஇரு நாடுகளுக்கும் இடையே சந்தை அணுகலை மேம்படுத்துதல்எளிய வர்த்தக நடைமுறைகள்மேம்படுத்தப்பட்ட சேவை சார்ந்த அர்ப்பணிப்புகள்தகுதிவாய்ந்த பணியாளர்கள் தடையற்ற முறையில் இடம்பெயர்தல் ஆகியவற்றின் மூலம் வர்த்தகம்முதலீடுகளை அதிகரிப்பதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளதுவிவசாயம்மீன்வளம்உற்பத்திசேவைகள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் வர்த்தகத் தடைகளைக் குறைத்துஏற்றுமதித் திறனை அதிகரிப்பதன் மூலம் புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்குகிறதுஅதே வேளையில்தகுந்த சந்தை அணுகல், வரிகளில் படிப்படியான தளர்வுகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் துறைகளை இந்த ஒப்பந்தம் பாதுகாக்கிறது.

இந்தியா, இங்கிலாந்து நாடுகள் வலுவான, வளர்ந்து வரும் பொருளாதாரக் கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.96 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும், பிரிட்டனின் பொருளாதாரம் 3.84 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும் இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்களின் வர்த்தகம் 2025-26 நிதியாண்டில் 25.12 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதில் பிரிட்டனுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 13.44 பில்லியன் டாலராகவும், இறக்குமதி மதிப்பு 11.68 பில்லியன் டாலராகவும் இருந்ததால், இந்தியாவுக்கு 1.76 பில்லியன் டாலர் வர்த்தக உபரியாக கிடைத்துள்ளது. அதேபோல், இருதரப்பு சேவைகள் வர்த்தகம் 2024-ம் ஆண்டில் 35.44 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்தியா 21.66 பில்லியன் டாலர் மதிப்பிலான சேவைகளை ஏற்றுமதி செய்து, 7.88 பில்லியன் டாலர் சேவைகள் வர்த்தக உபரியைப் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இங்கிலாந்து சந்தையில் இந்திய விவசாயப் பொருட்களுக்கு வரி இல்லாத சந்தை அணுகல் கிடைப்பதால், இந்திய விவசாயிகளின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக ஜவுளி, தோல், காலணிகள், ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகளில் ஏற்றுமதி அதிகரிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். ஜவுளித் துறையில் 1,143 தயாரிப்புகளுக்கும், உணவுப் பதனப்படுத்துதல் துறையில் 985 தயாரிப்புகளுக்கும் வரி இல்லாத சந்தை அணுகல் கிடைத்துள்ளது. மேலும், பிரிட்டனின் 8.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள தோல் சந்தையை இந்திய ஏற்றுமதியாளர்கள் எளிதாக அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இதுவரை விதிக்கப்பட்டு வந்த 4.2 முதல் 8.5 சதவீத சுங்க வரிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், கேரளம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பழங்கள், காய்கறிகள், நறுமணப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் இதனால் பெரும் பலன் அடைவார்கள்.

சேவைத் துறையில் தகவல் தொழில்நுட்பம், வணிகம், நிதி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட 12 முக்கியத் துறைகளின் கீழ் 137 துணைத் துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த நலன்கள் பாதுகாக்கப்பட்டதோடு, தொழில்முறைத் தகுதிகளை இரு நாடுகளும் பரஸ்பரம் அங்கீகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டைப் பங்களிப்பு உடன்படிக்கையின் கீழ், குறுகிய காலப் பணிகளுக்காகப் இங்கிலாந்து செல்லும் இந்தியப் பணியாளர்கள் 23 சதவீத தேசியக் காப்பீட்டுப் பங்களிப்பை தற்போது செலுத்த தேவையில்லை. இது 75,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பணியாளர்களுக்கும், 900 இந்திய நிறுவனங்களுக்கும் பெரும் நிதி நிவாரணத்தை வழங்கி, ஆண்டுதோறும் 600 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைச் சேமிக்க உதவும். இத்தகைய நடவடிக்கைகள் தற்சார்பு மிக்க, உள்ளடக்கிய, எதிர்கால வளர்ச்சியை நோக்கிய இருதரப்பு பொருளாதார உறவுக்குப் புதிய உந்துசக்தியாகத் திகழ்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284878&reg=3&lang=1

 

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2285060) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English