சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இந்தியா - இங்கிலாந்து விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் தமிழ்நாட்டிலிருந்து முதலாவது ஏற்றுமதித் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன
प्रविष्टि तिथि:
15 JUL 2026 12:11PM by PIB Chennai
இந்தியா - இங்கிலாந்து இடையேயான விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம் இன்று (15.07.2026) முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் சென்னையிலிருந்து, முதலாவது ஏற்றுமதித் தொகுப்புகளை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளத்துக்கான பிரிட்டன் துணைத்தூதர் டாக்டர் சுதபா சௌத்ரி, சென்னை வெளிநாட்டு வர்த்தக மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி ராஜலட்சுமி தேவராஜ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். 4,46,046 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வாகன உதிரிபாகங்கள், தோல் காலணிகள், அரிசி, சிறுதானியங்கள், உறைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகிய ஐந்து முக்கிய ஏற்றுமதித் தொகுப்புகள் கோயம்புத்தூர் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி, பிரேக்ஸ் இந்தியா, வீல்ஸ் இந்தியா, குட் லெதர் ஷூஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தியாவின் வலுவான, மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பதனப்படுத்தும் திறனை வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிலிருந்து 50 மெட்ரிக் டன் வேளாண், பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு, வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஏற்றுமதியில், ரீகல் ஸ்பைசஸ் நிறுவனத்தால் ஏற்றுமதி செய்யப்பட்ட 25 மெட்ரிக் டன் பிரீமியம் பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், நாட்டுச்சர்க்கரை ஆகியவற்றுடன், விஷ்ணுகுமார் டிரேடர்ஸ் நிறுவனத்தின் 25 மெட்ரிக் டன் உறைவிக்கப்பட்ட, உடனடியாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களும் அடங்கும்.

நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய திருமதி ராஜலட்சுமி தேவராஜ், இந்த ஒப்பந்தம் எளிய சந்தை அணுகலை உறுதி செய்வதன் மூலம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும், குறிப்பாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

பிரிட்டன் துணைத்தூதர் டாக்டர் சுதபா சௌத்ரி பேசுகையில், இந்த ஒப்பந்தம் வர்த்தக ஒத்துழைப்பின் புதிய யுகத்தைக் குறிப்பதுடன், அறிவியல், தொழில்நுட்பம், கல்வித் துறைகளில் முதலீடுகளை அதிகரித்து இந்தியா - இங்கிலாந்து 2035 தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.
**
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2284716)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English