சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டைகளுக்கான இலவச பதிவு முகாம் ஜிப்மரில் நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 14 JUL 2026 6:49PM by PIB Chennai

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் ஆகிய மக்கள் நலத் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், வரும் ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 15 வரை "நோயிலிருந்து விடுதலை" என்ற சிறப்பு விழிப்புணர்வு, பதிவு முகாமை ஜிப்மர் நடத்துகிறது.

இந்த முகாமின் மூலம், பொதுமக்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு எண், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்ட அட்டை, ஆயுஷ்மான் மூத்த குடிமக்களுக்கான அட்டை ஆகியவற்றை முற்றிலும் இலவசமாக, உடனடியாகப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள், நோயாளிகளின் வசதிக்காக, ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் சிறப்பு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெற்ற பணியாளர்கள் தகுதிச் சரிபார்ப்பு, பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்குவார்கள்.

இந்த முகாமில் தகுதியான பயனாளிகளுக்கு, ஆயுஷ்மான் சுகாதார கணக்கு எண் உருவாக்குதல், ஆயுஷ்மான் பாரத் அட்டை பதிவு, மூத்த குடிமக்களுக்கான அட்டை பதிவு, தகுதிச் சரிபார்ப்பு, திட்டங்கள் குறித்த வழிகாட்டுதல் ஆகிய சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பை ஜிப்மருக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜிப்மர் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

ஆயுஷ்மான் சுகாதார அட்டை எண், தங்களுக்கு பொருந்தும் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம், டிஜிட்டல் மருத்துவ சேவைகள், பணமில்லா மருத்துவக் காப்பீட்டு வசதி, தரமான சுகாதார சேவைகளை அனைவரும்  எளிதாகப் பெறமுடியும்.

பொதுமக்கள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, ஓடிபி-க்காக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் ஆகியவற்றைத் தங்களுடன் எடுத்து வர வேண்டும் என் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

இந்த நோயில்லா இந்தியா பிரச்சார முகாம், ஜூலை 16, 2026 முதல் ஆகஸ்ட் 15, 2026 வரை, தினமும் காலை 6.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஜிப்மர் வளாகத்தின் பல்வேறு பதிவு மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் முற்றிலும் இலவசமாக பதிவு செய்து கொண்டு பொதுமக்கள் சேவைகளைப் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 8903824770 / 0413-2297004 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284589&reg=3&lang=1

****

TV/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2284598) வருகையாளர் எண்ணிக்கை : 86
இந்த வெளியீட்டை படிக்க: English