சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை விமான நிலையத்தில் உயர்தர கஞ்சாவை சென்னை சுங்கத்துறை பறிமுதல் செய்தது

प्रविष्टि तिथि: 13 JUL 2026 6:15PM by PIB Chennai

பயணிகளின் விவரங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில், 2026 ஜூலை 12 அன்று கோலாலம்பூரிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இந்தியப் பயணி ஒருவரை சென்னை சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இடைமறித்து சோதித்தனர்.

பயணியின் பதிவு செய்யப்பட்ட பைகளை எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில், கெட்டியான மற்றும் அதிக துர்நாற்றத்தை வெளியிடும் பச்சை நிற, பொருள் அடங்கிய 49 பொட்டலங்கள் மீட்கப்பட்டன. நீர்க் கலவையில் வளர்க்கப்படும் உயர் ரக கஞ்சா என சந்தேகிக்கப்படும் அதன் மொத்த எடை 4,639 கிராம். இந்தக் கடத்தல் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தப் பறிமுதலைத் தொடர்ந்து, நிதியுதவியுடன் கூடிய வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது எளிதாகப் பணம் சம்பாதிப்பது போன்ற சலுகைகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், விழிப்புடன் இருக்குமாறு சென்னை சுங்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. சமீபத்திய பகுப்பாய்வில், கடத்தல் கும்பல்கள் இளம் வயதினரின் பயணம், தங்குமிடம் மற்றும் பிற செலவுகளுக்கு நிதியுதவி அளித்து, அவர்களைக் குறிவைத்து, பின்னர் அவர்கள் மூலம் இந்தியாவுக்குள் கடத்தல் பொருட்களை எடுத்து வந்து விநியோகிப்பது

தெரியவந்துள்ளது. இவை சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாகும், மேலும் இவை கடுமையான தண்டனையையும் நீண்டகால சட்ட விளைவுகளையும் ஏற்படுத்தும். மேலும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது எதிர்காலத்தை சீரழித்துவிடும்.  

***

TV/SMB/SE


(रिलीज़ आईडी: 2284261) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English