சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஆசிரியர்களுக்கான மனநலன் குறித்தப் பயிலரங்கு சென்னை ஐஐடி-யில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
13 JUL 2026 6:09PM by PIB Chennai
சென்னை ஐஐடி தென்னிந்திய ஆசிரியர்களுக்கான மனநலன் குறித்த இரண்டு நாள் பயிலரங்கை 2026 ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தியது. மாளவியா இயக்கம் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் நடைபெற்றது.

அப்போது டியுவி நார்ட் குழுமத்தின் சார்பாக ஐஎஸ்ஓ 45001:2018 சான்றிதழ், சென்னை ஐஐடி, நலவாழ்வு மையத்திற்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெறும் முதலாவது மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி உள்ளது.

இப்பயிலரங்கில் உரையாற்றிய கல்வித்துறை இணைச் செயலாளர் (உயர்கல்வி) திருமதி ரீனா சோனாவால் கௌலி, 2024 ஜனவரி மாதத்தில் மளாவியா இயக்கம் ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கப்பட்டதாகக் கூறினார். இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இப்பயிற்சி மாதத்திற்கு இருமுறை நடைபெறுவதாகவும் அவர் கூறினார். இது போன்ற நிகழ்வுகள் கல்விச் சூழலில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதாக அவர் தெரிவித்தார்.
இப்பயிலரங்கில் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
***
TV/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2284239)
आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English