சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நொய்டா, கிரேட்டர் நொய்டாவில், 17 நகர்ப்புற சாலைப் பகுதிகளை காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் ஆய்வு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 11 JUL 2026 7:34PM by PIB Chennai

தேசியத் தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம், தனது நிலையான வழிகாட்டுதல்களின்படி நகர்ப்புற சாலைகளை மேம்படுத்தும் பணிகளை மதிப்பீடு செய்வதற்காக, 10.07.2026 அன்று நொய்டா, கிரேட்டர் நொய்டா பகுதிகளில் சிறப்பு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் 46.87 கிலோமீட்டர் நீளமுள்ள 17 சாலைப் பகுதிகளில், 9 சாலைப் பகுதிகள் முழுமையாக (ஒரு முனை முதல் மறு முனை வரை) நடைபாதை வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தன. அதே சமயம், 8 சாலைப் பகுதிகளில் முழுமையான நடைபாதை வசதி இல்லாதது கண்டறியப்பட்டது. இது மேம்பாட்டுப் பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

கிரேட்டர் நொய்டா தொழில் மேம்பாட்டு ஆணையம், நொய்டா ஆணையம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைப் பகுதிகளை ஆய்வு செய்ய, நான்கு பறக்கும் படைகளை ஆணையம் நியமித்தது. 10-15 மீட்டர், 15 மீட்டருக்கும் அதிகமான பயன்பாட்டு உரிமை கொண்ட சாலைகளில், GNIDA-வின் கீழ் 11 சாலைப் பகுதிகளும், நொய்டா ஆணையத்தின் கீழ் 6 சாலைப் பகுதிகளும் இந்த ஆய்வில் அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283730&reg=3&lang=1

****

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2283759) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी