தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொலைத்தொடர்புத் துறை, இந்தியத் தொலைத்தொடர்பு தரநிலைகள் மேம்பாட்டுச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து

प्रविष्टि तिथि: 10 JUL 2026 8:30PM by PIB Chennai

இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் உலகளாவிய தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும், 'பாரத் 6ஜி தொலைநோக்கு இலக்கை அடையவும், மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் 'இந்திய தொலைத்தொடர்பு தரநிலைகள் மேம்பாட்டுச் சங்கம்' இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம், சர்வதேச தர நிர்ணய அமைப்புகளில் இந்தியாவின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்திய புத்தொழில்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உலகளாவிய தர நிர்ணய செயல்பாடுகளில் அதிகம் ஈடுபட இது வழிவகுக்கும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிந்தியா, "இந்தியா இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக மாறியுள்ளது. தொலைத்தொடர்பு என்பது மனித நாகரிகத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்தும் ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியாகச் செயல்படுகிறது. இந்தியக் கண்டுபிடிப்புகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பயன்பாட்டிற்கும் உதவும் வகையில் அமையும்" என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283468&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2283468

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2283517) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu