வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதித் திறனை மேம்படுத்த சிந்தனை முகாமிற்கு ஏற்பாடு

இடுகை இடப்பட்ட நாள்: 10 JUL 2026 8:46PM by PIB Chennai

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை, பல்வேறு மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்புகளுடன் இணைந்து புதுதில்லி பாரத மண்டபத்தில் சிந்தனை முகாமை நடத்தியது. இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது, சர்வதேச அளவில் அதன் போட்டித்திறனை அதிகரிப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வர்த்தகத் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசு உயரதிகாரிகள், தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நிலையான கொள்கை கட்டமைப்பு அவசியம் என்று வர்த்தகத் துறை செயலாளர் குறிப்பிட்டார். வரும் 2030-ம் ஆண்டிற்குள் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 150 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எட்டுவதற்கான செயல்திட்டம், செமிகண்டக்டர்கள், மின்னணு பாகங்கள் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த விளக்கக்காட்சிகள் இதில் காண்பிக்கப்பட்டன. உலகளாவிய வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை சர்வதேச விநியோகக் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது, சுங்க அதிகாரிகளுடன் இணைந்து ஏற்றுமதி நடைமுறைகளை எளிதாக்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283471&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2283516) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी