திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தேசிய திறன் தகுதிக் குழுவின் 50-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
09 JUL 2026 4:27PM by PIB Chennai
தேசிய திறன் தகுதிக் குழுவின் 50-வது கூட்டம் (முதல் கட்டம்) 2026 ஜூலை 8 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. திறன் மேம்பாடு, தொழல்முனைவோர் துறை செயலாளரும் தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் தலைவருமான திருமதி தேபாஸ்ரீ முகர்ஜி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. தேசிய தொழில்கல்வி மற்றும் பயிற்சிக் குழுமம் தேசியத் திறன் தகுதி குழுவின் 50-வது கூட்டத்தை பல்வேறு கட்டங்களாக நடத்துகிறது. இக்குழுவின் 50-வது கூட்டத்தின் இரண்டாவது கட்டம் 2026 ஜூலை 15 அன்று சிறப்புடன் நடத்தப்பட உள்ளது.
தொழில்துறையின் தேவைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நாட்டின் முன்னுரிமைகளுக்கேற்ப திறன் தகுதிகளை அமைப்பதை உறுதி செய்வதோடு அவற்றின் தரம், பொருத்தம், செயல்திறனை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282848®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2282969)
आगंतुक पटल : 11