சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 09 JUL 2026 4:36PM by PIB Chennai

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய அதிநவீன ஆதார் சேவை மையம் கோயம்புத்தூரில் இன்று தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஓய்வு பெற்ற சுங்கத்துறை கண்காணிப்பாளர், இந்திய தனித்துவ அடையாள ஆணைய பெங்களூரு மண்டல அலுவலகத்தின் இயக்குநர், இம்மையத்தின் அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்கவுள்ள நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் இந்த புதிய மையம் தொடங்கப்பட்டது.

இந்த மையத்தில் புதிய பதிவு, ஆதார் விவரங்கள் திருத்தம், பயோமெட்ரிக் புதுப்பித்தல், குறை தீர்ப்பு ஆகிய சேவைகளை தடையின்றி வழங்குவதற்காக எட்டு செயல்பாட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்படும். வழக்கமான பரிவர்த்தனைகளைக் கையாள்வதுடன், ஆதார் பயனாளிகளின் குறைகளை நேரடியாகப் பெற்று பிராந்திய அலுவலகம் மூலம் தீர்த்து வைக்கவும் இந்த மையம் வழிவகை செய்கிறது.

ன்று கோயம்புத்தூரில் புதிய மையம் தொடங்கப்பட்டதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஏழு ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இனி வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 23 மையங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதி, கழிவறை வசதிகளுடன் இந்த மையம் மைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்மையத்தில் ஆதார் தொடர்பான சேவைகளைப் பெற https://bookappointment.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2282864) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English