பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
முன்னோடித் திட்டமான நடுவர் மன்றத்தின் இரண்டாவது தொகுதியைத் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கி வைக்கிறது
प्रविष्टि तिथि:
08 JUL 2026 7:32PM by PIB Chennai
தகராறுகளுக்கு மாற்றுமுறையில் தீர்வு காண்பதற்கான சிறப்பு மையம் மூலம், சான்றளிக்கப்பட்ட நடுவர் மன்றத் திட்டத்தின் இரண்டாவது தொகுதியின் தொடக்க நிகழ்ச்சியை அண்மையில், மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம் (ஐஐசிஏ), காணொளி வாயிலாக ஏற்பாடு செய்திருந்தது.
சமகாலப் பிரச்சினைகள் குறித்த கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி, பரிந்துரை, ஆலோசனை ஆகியவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மென் உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இணைந்த ஐஐசிஏ-வின் ஒரு முன்னோடித் திட்டமாக இது அமைந்துள்ளது. இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான, உலக தரத்திலான நடுவர் மன்றத் தொழில் வல்லுநர்களின் குழுவை உருவாக்குவதை, ஐசிஏ நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் தொடக்க உரையாற்றிய ஐஐசிஏ-வின் தலைமை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியான திரு. ஞானேஷ்வர் குமார் சிங், நடுவர் மன்றத்தில் சேகரிக்கப்பட்டப் புள்ளிவிவரங்கள், ஆய்வுகளைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தியாவில் நிறுவன நடுவர் மன்றத்தின் மூலம், அதற்கானச் சூழலைத் தரநிலைப்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் வலியுறுத்தினார். நடுவர் மன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்தல், செயல்முறையில் நேர்மையான நடைமுறைகளை உறுதி செய்தல், நடத்தை விதிகள், முழுமையான நடுவர் மன்றச் சூழலமைப்பிற்காக, துறைசார்ந்த வலுவான திறன் கொண்ட பலதரப்பட்ட நடுவர் மன்ற நிபுணர்களை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை திரு சிங் வலியுறுத்தினார்.
முன்னணி கல்விப் படிப்புகள், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள், கொள்கை ஆராய்ச்சி, தகராறுகளுக்கான மாற்றுமுறைத் தீர்வு கண்டறிவதற்கான நிபுணர்கள், நடுவர் மன்றத் தீர்ப்புகளின் தரவுத்தளத்தை உருவாக்கிப் பராமரித்தல், மாற்றுத் தகராறு தீர்வு முறைகளின், குறிப்பாக நடுவர் மன்றத்தின் நன்மைகள் குறித்துப் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிற தொடர்புடைய முன்னெடுப்புகள் ஆகியவற்றின் மூலம், இந்தியாவில் ஒரு வலுவான மாற்றுத் தகராறு தீர்வுச் சூழலமைப்பை உருவாக்குவதில் ஐஐசிஏ அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளை அவர் பதிவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282584®=3&lang=1
(Release ID: 2282584)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2282658)
आगंतुक पटल : 10