உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவு பதப்படுத்தும் ஊக்கத்தொகைத் திட்டத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகளை வடிவமைப்பது குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்

प्रविष्टि तिथि: 08 JUL 2026 6:27PM by PIB Chennai

மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான நிதி உதவி குறித்த எதிர்கால செயல்திட்டம் குறித்து விவாதிக்கவும், ஊக்கத்தொகை / மானியம் வழங்கும் திட்டங்களின் அடுத்த கட்ட நடைமுறைகளை வடிவமைக்கவும், புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், இன்று சம்பந்தப்பட்ட தரப்பினருடனான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய தொழில்துறை நிதி நிறுவனம், 'இன்வெஸ்ட் இந்தியா' ஆகியவற்றின் பிரதிநிதிகள், தொழில் துறை நிறுவனங்களின்  தலைவர்கள், துறை சார்ந்த சங்கங்கள், உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் பயனாளிகள் பங்கேற்றனர். இத்திட்டத்தின் முன்மொழியப்பட்ட விரிவாக்கத்திற்கான வடிவமைப்பு, வரம்பு, செயல்படுத்தும் கட்டமைப்பு, ஊக்கத்தொகை கட்டமைப்பு ஆகியவை குறித்து தொழில் துறையினரிடமிருந்து முறையான கருத்துக்களைப் பெறுவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

தற்போதுள்ளஉணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை எடுத்துரைக்கும் விளக்கக்காட்சியுடன் இந்த ஆலோசனைக்கு கூட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் உறுதியளிக்கப்பட்ட ரூ 7,722 கோடி முதலீட்டு இலக்கில், பயனாளி நிறுவனங்கள் 22 மாநிலங்களில் உள்ள 212 உற்பத்தி மையங்களில் ரூ 9,207 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது வாக்குறுதிகளைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகளின் விற்பனை, 2019-20 நிதியாண்டில் ரூ. 58,758 கோடியிலிருந்து, 2025-26 நிதியாண்டில் ரூ 1,08,854 கோடியாக அதிகரித்து, 10.82 சதவீத ஒட்டுமொத்த வருடாந்திர  வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அதே காலகட்டத்தில், ஏற்றுமதி 11.05 சதவீத ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் ரூ 20,840 கோடியை எட்டியுள்ளது. இத்திட்டம் 3.35 லட்சம் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், அறிவிக்கப்பட்ட பழங்குடியினர் பகுதிகளில் ரூ 3,265 கோடிக்கும் அதிகமான முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. சிறுதானியங்கள் சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விற்பனை 104 சதவீத ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதத்திலும், சிறுதானிய கொள்முதல் 97 சதவீத ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதத்திலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282542&reg=3&lang=1

(Release ID: 2282542)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2282604) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , हिन्दी