மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
ஒடிசாவில் மீன்வளர்ப்புத் திட்டங்களை அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUL 2026 3:36PM by PIB Chennai
ஒடிசாவில் மீன்வளர்ப்பு, நீர்வாழ் உயிரினங்கள் மேம்பாட்டிற்கான திட்டங்களையும் செயல்பாடுகளையும் அமல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டத்தை 2026 ஜூலை 8 அன்று மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வள அமைச்சகம் நடத்தியது. இக்கூட்டம் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் நடைபெற்றது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாஹேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திரு ராஜீவ் ரஞ்சன் சிங், நன்னீர், உவர் நீர், கடல்சார் மீன்வளத்துறைகளில் பன்முகத்தன்மையுடன் கூடிய திறந்த மீன்வள மையமாக ஒடிசா உருவெடுத்துள்ளதை பாராட்டுவதாகக் கூறினார். 2025-26-ம் ஆண்டு மீன் உற்பத்தி 12.70 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்வர்களுக்கு உதவியதும் கடல் உணவு ஏற்றுமதி ரூ.5,429 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டியதும் சாதனையாகும் என்று அவர் தெரிவித்தார். பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒடிசா மாநிலத்திற்கு போதிய ஆதரவு கிடைத்துள்ளதாகவும் மீன் உற்பத்தியை அதிகரித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், மீன்பிடிப்புக்குப் பிந்தைய வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ரூ.1,301 கோடிக்கும் அதிகமான மதிப்புடையத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282426®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2282566)
வருகையாளர் எண்ணிக்கை : 43