இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மலபார் குழுமத்தின் 51 நிறுவனங்கள் இணைப்பு: இந்திய வணிகப் போட்டி ஆணையம் அனுமதி

प्रविष्टि तिथि: 07 JUL 2026 6:21PM by PIB Chennai

நகை வணிகத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மலபார் குழுமம், தனது செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் விதமாகப் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, மலபார் குழுமத்தைச் சேர்ந்த 51 வெவ்வேறு நிறுவனங்களை, அதன் முதன்மை நிறுவனமான 'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' நிறுவனத்துடன் இணைப்பதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம்  அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த இணைப்புத் திட்டத்தின்படி, இதுவரை தனித்தனியாகச் செயல்பட்டு வந்த 51 நகை வணிக நிறுவனங்களும், இனி மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் முழுமையாக ஒன்றிணைய உள்ளன.

 

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம், தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் பல்வேறு விலைமதிப்பற்ற ஆபரணங்களின் உற்பத்தி, சில்லறை மற்றும் மொத்த விற்பனை, ஏற்றுமதி-இறக்குமதி என நகை சார்ந்த அனைத்து வணிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282146&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2282146

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2282266) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी