இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

சார்ட்டிங் ஹேட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை வாங்குகிறது அப்-கிரேடு எஜுகேஷன்' நிறுவனம் : இந்திய வணிகப் போட்டி ஆணையம் அனுமதி

प्रविष्टि तिथि: 07 JUL 2026 6:21PM by PIB Chennai

கல்வித் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள 'அப்-கிரேடு எஜுகேஷன்' நிறுவனம், 'சார்ட்டிங் ஹேட் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பங்குகளைக் கையகப்படுத்துவதற்கும், அந்த நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கும் இந்திய வணிகப் போட்டி ஆணையம்  அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

 

இந்த இணைப்புத் திட்டத்தின்படி, 'அப்-கிரேடு எஜுகேஷன்' நிறுவனம், 'சார்ட்டிங் ஹேட் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலம், அந்த நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. முறையான மற்றும் முறையற்ற கல்வித் துறைகளில் ஏற்கனவே வலுவான இடத்தைப் பிடித்துள்ள 'அப்-கிரேடு' நிறுவனம், இந்த இணைப்பு மூலம் தனது கல்விச் சேவைத் தளத்தை மேலும் விரிவுபடுத்த உள்ளது.

 

 'சார்ட்டிங் ஹேட் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தை வாங்குவதற்கான இந்த நடவடிக்கைக்கு‌ இந்திய வணிகப் போட்டி ஆணையம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பான விரிவான உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282147&reg=3&lang=1

செய்தி அடையான எண்:2282147

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2282262) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी