தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானாவில் செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர்கள் புகார்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் இணையவழியில் விசாரணை நடத்துகிறது
प्रविष्टि तिथि:
07 JUL 2026 4:07PM by PIB Chennai
ஹரியானா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பான 86 புகார்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வரும் ஜூலை 9 அன்று இணையவழியாக விசாரணை நடத்தவுள்ளது. இந்த இணையவழி விசாரணைக்கு ஆணையத்தின் தலைவர் நீதிபதி வி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் ஹரியானா மாநில தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி, தொழிலாளர் நல ஆணையர், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ளுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை அடையாளம் கண்டு விடுவித்தல், இ-ஷ்ராம் இணையதளத்தில் அவர்களைப் பதிவு செய்தல் ஆகியவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கைகளை அதிகாரிகள் சமர்ப்பிக்கவுள்ளனர். கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்ட விதிகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு உதவித்தொகை, சமூக பாதுகாப்பு நலன்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282026®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2282195)
आगंतुक पटल : 16