சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

என்ஐடி புதுச்சேரியில் "கல்வியில் நாடகக் கலை" என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிலரங்கு நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 07 JUL 2026 2:59PM by PIB Chennai

 

புதுதில்லியில் அமைந்துள்ள கலாச்சார வளங்கள், பயிற்சி மையம், காரைக்காலில் அமைந்துள்ள என்ஐடி புதுச்சேரி ஆகியவை இணைந்து "கல்வியில் நாடகக் கலை" என்ற தலைப்பில் ஐந்து நாள் பயிலரங்கை நடத்துகின்றன. என்ஐடி புதுச்சேரி வளாகத்தில் நேற்று (06.07.2026) தொடங்கிய இப்பயிற்சி முகாம் வரும் ஜூலை 10 வரை நடைபெறவுள்ளது. காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 108 ஆசிரியர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றுள்ளனர்.  

இப்பயிலரங்கில் என்ஐடி புதுச்சேரி இயக்குநர் டாக்டர் மகரந்த் மாதவ் கங்காரேகர், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி திருமதி வி விஜயராணி, என்ஐடி-ன் பதிவாளர் டாக்டர் சுந்தரவர்தன், வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் அம்ரித் பிடே, டீன் டாக்டர் ஹர்கோவிந்தன், கலாச்சார வளங்கள் பயிற்சி மையக் கள அதிகாரி திரு தேவா ராம் மேக்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2282131) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English