சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 4-வது ஆண்டு சுகாதார முகாம் தொடங்கியது

प्रविष्टि तिथि: 07 JUL 2026 1:29PM by PIB Chennai

 

மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 4-வது ஆண்டு சுகாதார முகாம் 2026 ஜூலை 6 அன்று  தொடங்கியது. மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல ஆணையம், மெப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், ரேலா மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து இந்த முகாமை நடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 5 வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறவுள்ள இந்த முகாமில், மெப்ஸ் வளாகத்தில் உள்ள 35,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முழுமையான உடல்நலப் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளன.

இம்முகாமைத் தொடங்கி வைத்துப் பேசிய மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல இணை மேம்பாட்டு ஆணையர் திரு சி ஆர்தர் வோர்சியோ, நோய்த்தடுப்பு பராமரிப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு கூடுதலாக கல்லீரல் பரிசோதனை வசதி சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற முகாமில் சுமார் 10,000 ஊழியர்கள் பயனடைந்ததுடன், 583 பேருக்குத் தொடர் சிகிச்சைக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டு, 20 பேருக்குக் குறைந்த கட்டணத்தில் கண்புரை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் முக்கிய அம்சமாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு, பதிவு முகாம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர்களின் குடும்பத்தினரும் இந்த இலவசப் பரிசோதனைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 'குடும்ப சுகாதார தினமாக' அறிவிக்கப்பட்டுள்ளது.

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2282117) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English