சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
விலங்குகள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான தேசிய செயல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
06 JUL 2026 10:01PM by PIB Chennai
உலக விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விலங்குகள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான தேசிய செயல் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் சார்பில் புதுதில்லியில் நடைபெற்றது.
பொதுமக்களின் ஆரோக்கியம், கால்நடைகள் நலன், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்று இந்தியாவின் தயார்நிலை குறித்து விவாதித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் குப்தா, ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்புகள், மேம்பட்ட ஆய்வக வசதிகள், டிஜிட்டல் புத்தாக்க நடைமுறைகள் மூலம் பல்துறை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இந்த தேசிய செயல் திட்டம், மாநிலங்களுக்கு ஏற்ப பிராந்திய செயல் திட்டங்களை உருவாக்க உதவும் என்று அவர் தெரிவித்தார். சுகாதாரப் பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், களப்பணியாளர்களின் திறன்களை மேம்படுத்த இந்த புதிய தொழில்நுட்ப வளங்கள் பெரிதும் பயன்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281860®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2281921)
आगंतुक पटल : 11