கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் உலகின் கடல்சார் கல்வியில் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால்

प्रविष्टि तिथि: 06 JUL 2026 8:32PM by PIB Chennai

கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் கடல்சார் கல்விச் சூழல் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. நாட்டின் நீண்டகால கடல்சார் லட்சியங்களுக்கு ஏற்ப, தொழில் துறை ஒத்துழைப்பு, ஆராய்ச்சி, புத்தாக்கம், பணியாளர் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்தியதன் மூலம், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், கடல்சார் கல்வியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்த முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடியத் தலைமையின் கீழ், இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வகுப்பறை சார்ந்த கல்வி நிறுவனமாக இருந்த நிலையிலிருந்து, ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்துறை ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் நவீன கடல்சார் பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

கடல்சார் தொழில் துறையுடன் வலுவானத் தொடர்பு, மாறிவரும் துறைசார் தேவைகளுக்கு ஏற்ப கல்வித் திட்டங்களை வடிவமைக்கவும், பாடத்திட்டங்களை தொழில் துறை சார்ந்ததாகவும், எதிர்காலத் தேவைக்கு ஏற்றதாக மாற்றவும் உதவியுள்ளது. நவீன நூலகங்கள், மேம்பட்ட சிமுலேட்டர்கள், சிறந்த பொழுதுபோக்கு வசதிகள் மூலம், இந்தப் பல்கலைக் கழகம் கல்விசார் உட்கட்டமைப்பு வசதிகளைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

காப்புரிமைகளின் எண்ணிக்கை ஒன்று என்ற எண்ணிக்கையிலிருந்து ஏழாக அதிகரித்துள்ளதன் வாயிலாக, புத்தாக்கச் செயல்பாடுகளின் முடிவுகளும் கணிசமாக மேம்பட்டுள்ளதாக திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281825&reg=3&lang=1

(Release ID:2281825)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2281842) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English