அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விண்மீன் திரள்களில் மங்கிய நிலையில் உள்ள கருந்துளைகளின் செயல்பாடுகளைக் கண்டறிந்த ரேடியோ அலைகள் ஆய்வு

प्रविष्टि तिथि: 06 JUL 2026 3:56PM by PIB Chennai

பூமிக்கு அருகில் உள்ள விண்மீன் திரள்களை அதிநவீன ரேடியோ அலைகள் மூலம் ஆய்வு செய்ததில், இதுவரை பார்க்க முடியாத மங்கிய நிலையில் உள்ள அதிக அளவு நிறை கொண்ட கருந்துளைகளின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் அரு பேரி உள்ளிட்ட சர்வதேச விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இக்குழுவினர் விண்மீன் திரள்களின் மையப்பகுதிகளை விரிவாக ஆராய்ந்து, வழக்கமான ஆய்வுகளில் விடுபடக்கூடிய சிறிய அளவிலான கதிரியக்க உமிழ்வுகளைக் கண்டறிந்துள்ளனர்.  நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே ஆய்வகத் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு, தற்போதைய பிரபஞ்சத்தில் கருந்துளைகளின் வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தகைய மறைந்துள்ள கருந்துளைகள் தங்களின் சுற்றுப்புறங்களில் ஆற்றலைச் செலுத்துவதன் மூலம் விண்மீன் உருவாக்க வீதம், விண்மீன் திரள்களின் நீண்டகாலப் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரபஞ்சத்தின் விண்மீன் திரள்களின் மையப்பகுதியில் மறைந்திருக்கும் இத்தகைய மங்கிய கருந்துளைகளை அடையாளம் காண்பதில் உயர் ரக ரேடியோ அவதானிப்புகளின் முக்கியத்துவத்தை இந்த ஆராய்ச்சி விளக்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281654&reg=3&lang=1

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2281779) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी