எஃகுத்துறை அமைச்சகம்
2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் எஃகுத் துறை வளர்ச்சி கண்டுள்ளது
प्रविष्टि तिथि:
06 JUL 2026 4:35PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகம், எஃகுத் துறையில் டிஜிட்டல்மயமாக்கல் நடவடிக்கை குறித்து, 2026 ஜூன் 24 அன்று நடைபெற்ற 'சிந்தனை முகாம்' நிகழ்ச்சியில், டிஜிட்டல் திட்டத்தை முன்னிலைப்படுத்தியது. இது செயற்கை நுண்ணறிவு, தானியக்கம், டிஜிட்டல் மைனிங், பராமரிப்பு, நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. இந்த முயற்சி, இந்திய எஃகுத் தொழில் முழுவதும் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன், நீடித்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
மேகான் நிறுவனத்தின் தொடர்ச்சியான நிதிச் செயல்திறன், செயல்பாட்டுச் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில், மத்திய எஃகு அமைச்சகம், மினிரத்னா வகை-I அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த புதிய அந்தஸ்து, அதிக நிதி, செயல்பாட்டுக்கான தன்னாட்சி அதிகாரத்தை வழங்கி, திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் உதவுகிறது.
சீனா, ஜப்பான், ரஷ்யா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தட்டையான எஃகு மீது விலை நிர்ணயம் குறித்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சகத்தின் டிஜிடிஆர், பொருட்களை குவிப்பிற்கு எதிரான விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற அவசியமற்ற இறக்குமதிகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து, உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதே இந்த விசாரணை நடவடிக்கையின் நோக்கமாகும்.
அண்மையில், இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட மூன்று போர்க்கப்பலான, மறைந்து தாக்கும் வல்லமை கொண்ட ஐ.என்.எஸ். துனகிரி, நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். அக்ரே, ஆய்வுக் கப்பலான ஐ.என்.எஸ். சன்ஷோதக் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட 5,700 டன் சிறப்பு எஃகு முழுவதையும் வழங்கியதன் மூலம், செயில் நிறுவனம் நாட்டின் கடற்படைத் திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
என்.எம்.டி.சி நிறுவனம், ஜூன் 2026-ல், இரும்புத் தாது உற்பத்தி 5.15 மில்லியன் டன்களாக இருந்தது என்று அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 44% அதிகமாகும். அதே நேரத்தில், விற்பனை 11% அதிகரித்து, 3.98 மில்லியன் டன்களாக இருந்தது. 2026-27-ம் நிதியாண்டின், முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்), அதன் ஒட்டுமொத்த உற்பத்தி 15.10 மில்லியன் டன்களை எட்டியது. இது பருவமழை காலம், உள்நாட்டு எஃகு உற்பத்தியாளர்களிடமிருந்து தொடர்ச்சியான தேவை இருந்த போதிலும், வலுவான செயல்பாட்டுத் திறனைப் பிரதிபலிக்கிறது.
நாட்டின் எஃகு உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 221.9 மில்லியன் டன்களாக உள்ளது. இது, 2030-ம் ஆண்டிற்குள் 300 மில்லியன் டன் என்ற தேசிய எஃகு கொள்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டுவதற்கான நிலைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பாவில், ஆண்டுக்கு 2 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஒருங்கிணைந்த எஃகு ஆலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதாக ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் அறிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281676®=3&lang=1
(Release ID: 2281676)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2281772)
आगंतुक पटल : 12