சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மக்களை மையப்படுத்திய சட்ட அமைப்பை உருவாக்குவதற்கான மவுண்ட் அபு பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUL 2026 8:53PM by PIB Chennai
மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் சட்ட விவகாரத் துறை, சட்டமியற்றல் துறை இணைந்து ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் உள்ள ஞான சரோவரில் நடத்திய சீர்திருத்த விழா & சிந்தனை முகாம் 2026 இன்று நிறைவடைந்தது இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதியுடன், மக்களை மையப்படுத்திய சட்ட அமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சகத்தின் கூட்டு உறுதிப்பாட்டை வலியுறுத்தும் மவுண்ட் அபு பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நிறைவு விழாவில் பேசிய மத்திய சட்டம், நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், கருத்துகளை செயல்பாடுகளாக மாற்ற அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். சுயபரிசோதனை, சீர்திருத்தம், மாற்றத்தை ஏற்படுத்தும் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை குறித்து எடுத்துரைத்த அவர், அமைச்சகத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2281391®=3&lang=1
***
SS/PD/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2281415)
வருகையாளர் எண்ணிக்கை : 48