சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கல்பாக்கம், சென்னை அணுமின் நிலையத்தின் (MAPS) இயக்குநராக திரு. எஸ்.பி. செல்வகுமரன் பொறுப்பேற்றுள்ளார்

प्रविष्टि तिथि: 03 JUL 2026 7:20PM by PIB Chennai

கல்பாக்கம், சென்னை அணுமின் நிலையத்தின் (MAPS) இயக்குநராக திரு. எஸ்.பி. செல்வகுமரன் பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே இப்பொறுப்பில் இருந்த திரு எம் சேஷையா, பணி ஓய்வு பெற்றதை அடுத்து திரு. செல்வகுமரன் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். இப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, திரு செல்வகுமரன் சென்னை அணுமின் நிலையத்தின் (MAPS) தலைமை கண்காணிப்பாளராகப் (Chief Superintendent) பணியாற்றினார்.

கிழக்குக் கடற்கரையில் உள்ள கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணுமின் நிலையம், இந்திய அணுசக்தி கழகத்தின் (Nuclear Power Corporation of India Limited - NPCIL) கீழ் இயங்கி வரும் ஒரு நிலையமாகும். இது தலா 220 மெகாவாட் (MWe) நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அழுத்தப்பட்ட கனநீர் உலை (Pressurized Heavy Water Reactor - PHWR) பிரிவுகளைக் கொண்டுள்ளது.

1988 ஆம் ஆண்டில் திருச்சி என்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Honours) பட்டம் பெற்ற திரு செல்வகுமரன், 1989 இல் என்.பி.சி.ஐ.எல் (NPCIL) நிறுவனத்தின் முதலாவது உள்நிலைப் பயிற்சி பிரிவில் சேர்ந்தார். அணுமின் நிலையங்களைத் தொடங்குதல், இயக்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பிரிவுகளில், அணுசக்தி துறையில் இவருக்கு 36 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. 2002-2003 காலகட்டத்தில் சென்னை அணுமின் நிலையத்தின் (MAPS) 2-வது பிரிவில் ஒட்டுமொத்தமாக குளிரூட்டி குழாய்களை மாற்றியமைக்கும்  பணியில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். 26 டிசம்பர் 2004 அன்று சுனாமி அலைகள் கல்பாக்கம் கடற்கரையைத் தாக்கியபோது, அணுமின் நிலையத்தின் சூழ்நிலையை இவர் மிகச்சிறப்பாகக் கையாண்ட விதம், சென்னை அணுமின் நிலையத்தின் இரு பிரிவுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மிக முக்கியமாக அமைந்தது.

****

TV/SH


(रिलीज़ आईडी: 2280879) आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English