தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கரீம்நகர் பகுதியில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 02 JUL 2026 6:36PM by PIB Chennai

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பொது தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக, 2026 மே மாதத்தில் ஆந்திர பிரதேசத்தின் கரீம்நகரில் சோதனை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

 

இந்த சோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பதாகும். இந்த வெளிப்படையான செயல்பாட்டு சோதனையின் போது, கவரேஜ், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், போன்ற முக்கிய சேவைத் தர அளவுருக்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை டிராய் பதிவு செய்தது. பின்னர் இந்த முடிவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்பட்டுள்ளன.

 

டிராய், தனது நியமிக்கப்பட்ட முகமை மூலம், 11 மே 2026 முதல் 12 மே 2026 வரை, கரீம்நகர், வேமுலவாடா, சிரிசில்லா ஆகிய பகுதிகளில் சோதனைகளை நடத்தியது. இந்தச் சோதனைகள் ஹைதராபாத்தின் டிராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280452&reg=3&lang=1

(Release ID : 2280452)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2280581) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी