தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஹிந்துபூர் - ஹைதராபாத் நெடுஞ்சாலை வழித்தடம், ரயில் வழித்தடங்களில் மொபைல் நெட்வொர்க் தரத்தை டிராய் மதிப்பீடு செய்தது
प्रविष्टि तिथि:
02 JUL 2026 6:21PM by PIB Chennai
ஹிந்துபூரிலிருந்து ஹைதராபாத் வரையிலான நெடுஞ்சாலை வழித்தடத்தில், அனந்தபூர், தோன், கர்னூல், ஜட்சர்லா உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் மொபைல் நெட்வொர்க்கின் தரத்தை டிராய் ஆய்வு செய்தது.
ரயில் பாதையைப் பொறுத்தவரை ஹைதராபாத் முதல் இந்துபூர் வரை ஜட்செர்லா, கர்னூல் டவுன், டோன் சந்திப்பு, கூடி சந்திப்பு, அனந்தபூர், தர்மாவரம் சந்திப்பு போன்றவற்றைக் கடந்து செல்கிறது.
இவற்றில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பொது தொலைத்தொடர்பு நுகர்வோரின் தகவலுக்காக, 2026 ஏப்ரல் மாதத்தில், சோதனை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த சோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் மொபைல் நெட்வொர்க் சேவைகளின் தரத்தை மதிப்பிட்டு சரிபார்ப்பதாகும். இந்த தானியங்கி சோதனையின் போது, கவரேஜ், அழைப்புத் துண்டிப்பு விகிதம், அழைப்பு இணைப்பு வெற்றி விகிதம், தரவு பதிவிறக்கம், போன்ற முக்கிய சேவைத் தர அளவுருக்களில் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் செயல்திறனை டிராய் பதிவு செய்தது. பின்னர் இந்த முடிவுகள், நுகர்வோருக்குத் தெரிவிக்கவும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் தங்கள் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கவும் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280453®=3&lang=1
(Release ID : 2280453)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280576)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English