தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சத்தீஸ்கர் கிராமிய வங்கி ஊழியர்கள் தொடர்பான விவகாரத்துக்கு ராய்ப்பூர் மண்டல மத்திய தொழிலாளர் நல ஆணையரக முயற்சிகள் மூலம் தீர்வு எட்டப்பட்டது
प्रविष्टि तिथि:
02 JUL 2026 6:12PM by PIB Chennai
சத்தீஸ்கர் கிராமிய வங்கியின் ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்பான ஒரு தொழிற்தகராறைத் தீர்ப்பதில், மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராய்ப்பூர் மண்டல மத்திய தலைமைத் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தின் சமரச முயற்சிகள் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் பிரிவின் அகில இந்திய மண்டல கிராமிய வங்கி ஊழியர் சங்கம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்காக 29 ஜூன் 2026 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க முன்மொழிந்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை எழுந்தது. ராய்ப்பூரின் மண்டல தொழிலாளர் ஆணையர் ஏற்பாடு செய்த நீண்ட சமரச நடவடிக்கைகளைத் தொடர்ந்து , வங்கி நிர்வாகத்திற்கும் ஊழியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக, 2020-ம் ஆண்டின் தொழில்துறை உறவுகள் சட்டத்தின் பிரிவு 53(3) -ன் கீழ் ஒரு முத்தரப்பு தீர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டது. இது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வழிவகுத்தது.
சமரச நடவடிக்கைகள் 22 ஜூன் 2026 அன்று காலை 11:00 மணிக்குத் தொடங்கி இரவு 8:30 மணிக்கு நிறைவடைந்தன. இந்தத் தீர்வு சத்தீஸ்கர் கிராமிய வங்கியின் சுமார் 2,610 ஊழியர்களுக்குப் பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280437®=3&lang=1
(Release ID : 2280437)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280572)
आगंतुक पटल : 7