ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை
பிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்த 3-வது உலகளாவிய மாநாடு புதுதில்லியில் தொடக்கம்
प्रविष्टि तिथि:
02 JUL 2026 6:00PM by PIB Chennai
பிளாஸ்டிக் (நெகிழி) மறுசுழற்சி, நிலைத்தன்மை குறித்த 3-வது உலகளாவிய மாநாடு, ஒரு சர்வதேச கண்காட்சியுடன் இணைந்து, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று (02.07.2026) தொடங்கியது. இந்த நான்கு நாள் நிகழ்வை, ரசாயனம், உரம், பெட்ரோ கெமிக்கல் துறையின் செயலாளர் திரு தேஜ்வீர் சிங் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், நெகிழி கழிவுகள் எனும் உலகளாவிய பிரச்சனையைச் சமாளிக்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்பதை வலியுறுத்தினார். உலகளாவிய சிறந்த நடைமுறைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, நெகிழி கழிவு மேலாண்மைக்கான நல்ல தொழில்நுட்ப நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதையும் திரு சிங் வலியுறுத்தினார்.
பிளாஸ்டிக்குகளும் பிளாஸ்டிக் மறுசுழற்சியும் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும், இத்துறை நவீன, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், உயர் மதிப்புள்ள தொழிலாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பேக்கேஜிங்கை நோக்கிய தொழில்துறையினரின் நடவடிக்கைகளைப் பாராட்டிய திரு சிங், பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த உண்மையான கவலைகளுக்கு நீடித்த தீர்வுகளைக் கண்டறியுமாறு பிளாஸ்டிக் தொழில் துறையினரையும், ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவுகளையும் கேட்டுக்கொண்டார்.
இந்திய மறுசுழற்சி பிளாஸ்டிக் சந்தையானது, 2024-2032 காலகட்டத்தில் 10.95 சதவீத வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து, 2032-ம் ஆண்டுக்குள் 3.81 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலக அளவில், பிளாஸ்டிக் மறுசுழற்சி சந்தையானது 2033-ம் ஆண்டுக்குள் 80.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் கூறினார். இது, நிலையான மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது என்று திரு தேஜ்வீர் சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280429®=3&lang=1
(Release ID : 2280429)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2280546)
आगंतुक पटल : 7