சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக திரு. சனோஜ் குமார் ஜா கூடுதல் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 02 JUL 2026 8:50PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு. சனோஜ் குமார் ஜா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுள்ளார்.

திரு. சனோஜ் குமார் ஜா, சிறந்த நிர்வாக அனுபவத்தையும், நிலக்கரி மற்றும் எரிசக்தித் துறைகளில் ஆழமான புரிதலையும் கொண்டவர். கொள்கை உருவாக்கம், மூலோபாயத் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் அவர் கொண்டுள்ள விரிவான அனுபவம், சுரங்கத் தொழில், மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் பன்முகத்தன்மை கொண்ட நிறுவனமாக என்எல்சி உருவெடுத்து வரும் தற்போதைய வளர்ச்சிப் பயணத்திற்குப் பெரும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள், உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் திரு. சனோஜ் குமார் ஜா அவர்களை அன்புடன் வரவேற்கின்றனர். செயல்பாட்டுத் திறன், நிலையான வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றில் நிறுவனத்தை புதிய மைல்கற்களை நோக்கி அவர் வழிநடத்துவார் என நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கிறது.

திரு. சனோஜ் குமார் ஜா தலைமையின் கீழ், உற்பத்தித் திறன் விரிவாக்கம், செயல்பாட்டு திறன், எண்ணிம (டிஜிட்டல்) மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி மற்றும் புதிய துறைகளில் முதலீடு செய்தல் உள்ளிட்ட நிறுவனத்தின் மூலோபாயத் திட்டங்கள் மேலும் ஊக்கம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுரங்கம், மின்சாரம் மற்றும் பசுமை எரிசக்தித் திட்டங்களைச் செயல்படுத்தி, நிறுவனம் லட்சிய வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான கால கட்டத்தில் அவரது நியமனம் நிகழ்ந்துள்ளது. திரு. சனோஜ் குமார் ஜா அவர்களின் வழிகாட்டுதலில், நிறுவனம் புதிய உச்சங்களைத் தொடுவதோடு, இந்தியாவின் நிலையான எரிசக்தி எதிர்காலத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

TV/SH


(रिलीज़ आईडी: 2280545) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English