சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கழுத்து நரம்பு தொகுதி மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை ரோபோ உதவியுடன் ஜிப்மர் வெற்றிகரமாக செய்துள்ளது
प्रविष्टि तिथि:
02 JUL 2026 4:36PM by PIB Chennai
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ரோபோ உதவியுடன் வெற்றிகரமாக கழுத்து நரம்பு தொகுதி மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை செய்துள்ளது. இரண்டு நோயாளிகளுக்கு இத்தகைய அறுவை சிகிச்சை 2026 ஜூன் 29 அன்று மேற்கொள்ளப்பட்டது. இது மேம்பட்ட மறுசீரமைப்பு நுண்ணறிவு சிகிச்சைத் துறையில் ஜிப்மர் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதை காட்டுகிறது.
இந்த அறுவை சிகிச்சைகளை மருத்துவர் தினேஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டிய ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவ சேவைகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் ஜிப்மரின் உறுதிப்பாட்டை இந்த சாதனை வெளிப்படுத்துவதாக கூறினார்.
ரோபோட்டிக் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் வலி குறைதல், மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைதல், விரைவாக குணமடைதல், விரைவிலேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்புதல் போன்ற பல நன்மைகள் நோயாளிகளுக்கு கிடைப்பதாக வீர் சிங் நேகி தெரிவித்தார்.
இந்த வெற்றிகரமான சாதனை வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களை மருத்துவ சேவையுடன் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்குவதில் ஜிப்மர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சியின் வெளிப்பாடாகும்.
****
TV/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2280519)
आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English