சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அஞ்சல் துறையில் போலியான பணி நியமன ஆணைகள், ஆள்சேர்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
प्रविष्टि तिथि:
02 JUL 2026 4:38PM by PIB Chennai
அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் பெயரில் போலியான பணி நியமன ஆணைகளும், ஆள்சேர்ப்பு மோசடி தொடர்பான தகவல்களும் பரப்பப்பட்டு வருவது அஞ்சல் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.
பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கோ அல்லது ஆள்சேர்ப்பு செயல்முறைகள் எதற்கும் விண்ணப்பதாரர்களிடம் எந்தவொரு தொகையையோ, கட்டணத்தையோ அல்லது ஆதாயத்தையோ அஞ்சல் துறை கோருவதோ, கோர முற்படுவதோ அல்லது ஏற்பதோ இல்லை என இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு மாறாக யாராவது உரிமை கோரினால், அவர்கள் மோசடியில் ஈடுபடுகிறார்கள் என்று அர்த்தம்.
வேலை அல்லது பணி நியமனத்தைப் பெறுவதற்காக எந்தவொரு நபரிடமோ அல்லது இடைத்தரகரிடமோ எந்தவொரு தொகையையும் கொடுக்க வேண்டாம் என விண்ணப்பதாரர்களும் பொதுமக்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு யாரேனும் பணம் கோரினால், அது குறித்து உடனடியாக அஞ்சல் துறைக்கும், காவல்துறையிடமும் புகார் அளிக்க வேண்டும்.
ஆள்சேர்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களின் உண்மைத்தன்மையை, அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, அதிகாரப்பூர்வமாக சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். மோசடி செய்பவர்களுடன் தொடர்பில் இருப்பதாலோ அல்லது போலியான பணி நியமன ஆணைகள், மோசடித் தகவல்களை நம்புவதாலோ ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் அஞ்சல் துறை பொறுப்பேற்காது.
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2280501)
आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English